சமூக ஊடகங்களில் கண்காணிப்பை கடுமையாக்கும் சவுதி அரேபியா!

Share this News:

ஜித்தா (23 ஜன 2023): “சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்” என்று பொதுப் பாதுகாப்புத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-பஸ்ஸாமி தெரிவித்துள்ளார்.

22வது ஹஜ் உம்ரா ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய முகமது அல்-பஸ்ஸாமி கூறுகையில், “சவூதி அரேபியாவில் குற்றவாளிகள் வாகனங்களில் பயணித்தால் அவர்களை பிடிக்கும் புதிய முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

குலுனா அமீன் இயங்குதள மேம்படுத்தல் நடந்து வருகிறது. குற்றவாளிகள் பற்றிய அனைத்து தகவல்களும் தகவல் தருபவர்களால் அந்த இயங்குதளத்தில் புதுப்பிக்கப்படும்.

மக்காவில், அதிகாரிகளுக்கு யாத்ரீகர்களின் தகவல்கள் மற்றும் ஹஜ், உம்ரா அனுமதிகளை சரிபார்க்கும் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கா எல்லையில் வாகனங்கள் மற்றும் தனிநபர்களை அடையாளம் காண உதவும் வகையில் ஜவாஹிர் தளம் விரைவில் தொடங்கப்படும்.” என்று அவர் கூறினார்.

மக்கா ராயல் அத்தாரிட்டி தலைவர் என்ஜி சலே பின் இப்ராஹிம் அல் ரஷீத் கூறுகையில், மக்கா நகரில் மேலும் 30 தெருக்கள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அனைத்து தெருக்களிலும் உள்ள சாலைகள் மற்றும் கட்டிடங்கள் உயர் தரத்திற்கு மேம்படுத்தப்படும். அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply