சீனாவுக்கான சவூதி ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து!

Share this News:

ரியாத் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவுக்கான சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் சீனாவுக்கான விமான போக்குரவத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன. அந்த வரிசையில் சவூதி அரேபியாவும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து தொடரும் என்றும் அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply