21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகெரட் விற்பனை செய்யக்கூடாது – சவூதி அரேபியாவில் புதிய சட்டம்!

Share this News:

ஜித்தா (06 அக் 2022): சவூதி அரேபியாவில் திருத்தப்பட்ட புகைத்தல் தடுப்புச் சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது

சவூதி ஷூரா கவுன்சில், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புகையிலை பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய சட்டத்தின்படி மசூதிகள், அமைச்சகங்கள், அரசு துறைகள், பொது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரம், விளையாட்டு, கலாச்சார மற்றும் சமூக நிறுவனங்களின் வளாகங்களில் புகைபிடிப்பதை கண்டிப்பாக தடை செய்கிறது.

குறிப்பிட்ட எண் மற்றும் அளவு கொண்ட சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் மட்டுமே புகையிலை பொருட்களை விற்க வேண்டும். அவை பொது போக்குவரத்து அமைப்புகளிலோ அல்லது விற்பனை இயந்திரங்கள் மூலமோ விற்கப்படக்கூடாது. குறைவான விற்பனை செய்யக்கூடாது என்றும், புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து எச்சரிக்கும் சுவரொட்டிகளை விற்பனை செய்யும் இடத்தில் ஒட்ட வேண்டும் என்றும் சட்டம் கட்டளையிடுகிறது.


Share this News:

Leave a Reply