சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Share this News:

ரியாத் (12 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு முதல் வியாழன் வரை மிதமானது முதல் பலத்த மழை, இடி, காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா, தாயிப் என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை எச்சரிக்கை காரணமாக ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக சவுதி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply