சவூதி ஜித்தாவில் மிகப்பெரிய மதுபான கிடங்கு – அதிகாரிகள் சோதனையில் சிக்கியது!

Share this News:

ஜித்தா (20 ஜன 2023):சவூதி அரேபியா ஜித்தா நகரில் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சட்டவிரோத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கிழக்கு ஜித்தாவில் உள்ள அல் தய்சீர் மாவட்டத்தில் உள்ள இந்த சட்டவிரோத கிடங்கில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கு இருந்த சட்டவிரோத கிடங்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த மையம், மதுபானங்களை சேமித்து வைக்கும் கிடங்காக தவறாக பயன்படுத்தப்பட்டது சோதனையின்போது தெரியவந்தது.

நகராட்சி குழுவினர் சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து இந்த சட்டவிரோத கிடங்கில் சோதனை நடத்தினர். அங்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான 636 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இக்காமா மற்றும் தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்களால் இந்த சட்டவிரோத கிடங்கு நடத்தப்பட்டதாகவும் அப்ரூக் அல்ரிகம பலதியாவின் தலைவர் கலீல் ஹமூத் அல் சஹ்ரானி தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply