அம்பேத்கரை அடையாளப்படுத்தியது முஸ்லிம்லீக் தான் : முன்னாள் எம்.பி பேச்சு!

Share this News:

ரியாத் (17 டிச 2022): காயிதே மில்லத் பேரவை ரியாத் சார்பாக சந்திப்போம் சங்கமிப்போம் என்கிற நிகழ்ச்சி க்ளாஸிக் அரங்கில் வெள்ளிக்கிழமை (16 டிசம்பர் 2022) நடைபெற்றது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினர் M. அப்துல்ரஹ்மான் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வுக்கு பேரவையின் தலைவர் சுலைமான் ஃபைஜி தலைமை தாங்க, பொதுச்செயலாளர் லால்பேட்டை நாஸர் தொகுத்து வழங்கினார். “கலிமா” ஷாகுல்ஹமீது; கேஎம்சிசி முஸ்தஃபா, இந்தியன் வெல்பேர் ஃபாரம் ஜாகிர், சவூதி திமுக மருத்துவர் சந்தோஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வில் சிறப்புரையாகப் பேசிய முன்னாள் எம்.பி “இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் போது சட்டமேதை அம்பேத்கருக்கு காங்கிரஸ் பேரியக்கம் இடம் தர இயலாத சூழல் ஏற்பட்டது. அச்சமயம், முஸ்லிம்லீக் தனது உறுப்பினர் ஒருவரை பதவி விலகச் செய்து, அந்த இடத்துக்கு அம்பேத்கரை அனுப்பி, அவரை அடையாளப்படுத்திய பெருமை முஸ்லிம்லீக்குக்கே உண்டு; என்று கூறினார்

அரசியல் நிர்ணய சபையால் உறுதிப்படுத்தப்பட்ட பல்வேறு மத இனத்தவர்களுக்கான தனியார் சட்டங்கள் பாதுகாக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இறைவனை வணங்கி வாழ்தலும் இல்லாதார்க்கு வழங்கி வாழ்தலும், எல்லோருடனும் இணங்கி வாழ்தலுமே இஸ்லாம் என்றார் முன்னாள் எம்.பி

மேலும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஊருக்குத் திரும்பும் எதிர்காலச் சூழலை மனத்திற்கொண்டு சேமிப்புப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்; பொருளாதாரத்தில் பிறரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக லால்பேட்டை இம்தாதுல்லாஹ் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


Share this News:

Leave a Reply