சவூதியில் வெளிநாட்டவர்களின் இக்காமா புதுப்பித்தல் மற்றும் ரீ என்ட்ரி விசா கட்டணம் சில மாறுபாடுகள்!

Share this News:

ரியாத் (01 ஜன 2022): சவூதி அரேபியா அரசாங்கத்தின் இகாமா மற்றும் ரீ என்ட்ரி கட்டணம் தொடர்பான முடிவுகளில் வெளிநாட்டவர்களுக்கு சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர்களுக்கு ரீ-என்ட்ரி விசா நீட்டிப்பு மற்றும் இகாமா புதுப்பித்தல் ஆகிய கட்டணங்கள் இரட்டிப்பாகும் என்பது புதிய தகவல் இதனை சவூதி அரேபிய முக்கிய ஊடகங்களான சவூதி கெசட், அல்மதீனா உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதன்படி வெளிநாட்டவர் சவுதி அரேபியாவில் இருந்தால், மறு நுழைவு கட்டணம் இரண்டு மாதங்களுக்கு 200 ரியால். ஒவ்வொரு கூடுதல் மாதத்திற்கும் 100 ரியால்கள் வசூலிக்கப்படும். சவூதி அரேபியாவுக்குச் சென்றால் மீண்டும் நுழைவதற்கான கால அவகாசத்தை 1 மாதம் நீட்டிக்க 100 ரியாலில் இருந்து 200 ரியால் கட்டணம் உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மூன்று மாதங்களுக்கு மல்டிபிள் ரீ-என்ட்ரி விசா 500 ரியால்கள். ஒவ்வொரு கூடுதல் மாதத்திற்கும் 200 ரியால் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒருவர் சவுதி அரேபியாவை விட்டு வெளியேற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் காலத்தை நீட்டிக்கலாம். அதற்கு இரண்டு மடங்கு பணம் செலவழிக்க வேண்டும். அதாவது 400 ரியால் செலவாகும்.

மேலும் இகாமாவின் காலம் முடிவடையவில்லை என்றால் மட்டுமே ரீ என்ட்ரி விசாவை நீட்டிக்க முடியும்.


Share this News:

Leave a Reply