சவூதி அரேபியா ஜித்தாவில் பாதாள வழிகள் மூடல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Share this News:

ஜித்தா (02 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு பாதாள சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன சாலையில் இணையும் அமீர் மஜித் சுரங்கப்பாதை வடக்கிலும், அல்ஜாமியா சுரங்கப்பாதை இருபுறமும், கிங் அப்துல்லா சாலை மற்றும் மதீனா சாலையும், கிங் அப்துல்லா சாலை மற்றும் கிங் ஃபஹத் சாலையும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த பாதாள சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை குழு கேட்டுக் கொண்டுள்ளது.

சிவில் டிஃபென்ஸ் ஜெட்டாவில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply