கத்தாரில் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவசர உத்தரவு!

Share this News:

தோஹா (21 ஜன 2023): ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் 23 நாட்களுக்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக, ஹயா அட்டையில் கத்தாருக்கு வந்தவர்கள் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

ஹயா அட்டையில் கத்தாருக்கு வருபவர்கள் நவம்பர் 1 முதல் ஜனவரி 23 வரை அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நேரம் நீட்டிக்கப்படும் என்று நம்பாமல், பயண நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23ஆம் தேதிக்குப் பின்னர் நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply