புனித மக்காவில் திடீர் மழை வெள்ளம் – அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – VIDEO

Share this News:

மக்கா (24 டிச 2022): சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரை வெள்ளிக்கிழமை திடீர் வெள்ளம் தாக்கியது, கார்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டன. எனினும் சேதங்கள் குறித்து தகவல் இல்லை.

பல முக்கிய சாலைகள் மூடப்பட்ட நிலையில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

எதிர்பாராத இடியுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தால் மக்காவிற்கு வந்துள்ள உம்ரா யாத்திரிகர்கள் திகைத்து நின்றனர்.

எதிர்பாராத சூழ்நிலையைச் சமாளிக்க 200க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் 4,000 பணியாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட உபகரணங்களைத் நியமித்து நிலமை சரி செய்யப்பட்டன.

வெள்ளம் காரணமாக மக்கா-ஜித்தா நெடுஞ்சாலையை மூடப்பட்டன. கனமழை காரணமாக ஜித்தாவில் அல்-ஹரமைன் சாலை உட்பட பல சாலைகள் மூடப்பட்டன.

ஜித்தா கிங் அப்துல்லாஜிஸ் விமான நிலையத்தில் மழை காரணமாக, சில விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், தங்கள் விமானங்களின் நிலையை உறுதிப்படுத்த அழைக்குமாறு பயணிகளைக் கேட்டுக் கொண்டது.

முன்னதாக, தேசிய வானிலை மையம் வானிலை எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply