சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

Share this News:

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார்.

கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது.

பிரசவ காலத்தில் அந்த பெண் சிக்கல்களை தவிர்ப்பதற்காக ஐந்தாவது மாதத்திலேயே மருத்துவ கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாயும் கருவில் உள்ள குழந்தைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

தற்போது அந்த பெண்ணும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக ரியாத் இரண்டாவது ஹெல்த் கிளஸ்டர் தெரிவித்துள்ளது.

பிரசவத்தின் போது தாயோ அல்லது குழந்தைகளோ எந்தச் சிக்கலையும் சந்திக்கவில்லை. குழந்தைகளின் எடை 1 கிலோ முதல் 1.3 கிலோ வரை உள்ளன.

அதேவேளை சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக ரியாத் இரண்டாவது சுகாதார கிளஸ்டர் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply