அபுதாபியில் முதல் இந்து கோவில்; புதிய வடிவமைப்பை தேர்வு செய்தார் யூஏஇ அதிபர்!

Share this News:

அபுதாபி (11 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியில் முதல் இந்து கோவிலின் வடிவமைப்பை தேர்வு செய்தார். வளைகுடா ஊடகமான கலீஜ் டைம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது.

வழக்கமான கோவிலுக்கு பதிலாக, பாரம்பரிய கற்கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, கோவிலின் பொறுப்பாளர் பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன் கோவிலின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகையில் ஷேக் முகமதுவைச் சந்தித்து கோவிலின் இரண்டு திட்டங்களைக் காட்டினார்கள். ஷேக் முஹம்மது இதிலிருந்து சிறந்த வடிவமைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் 2015 இல், அபுதாபியில் கோயில் கட்ட ஐக்கிய அரபு அமீரக அரசு நிலம் ஒதுக்கியது. கோயில் கட்டுவதற்காக 13.5 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் வாகன நிறுத்த வசதிக்காக கூடுதலாக 13.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடியிடம், அப்போதைய அபுதாபி பட்டத்து இளவரசரும், தற்போதைய அதிபருமான ஷேக் முகமது நிலத்தை ஒப்படைத்தார்.


Share this News:

Leave a Reply