பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

பஹ்ரைன் (25 பிப் 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதி வேகமாக பரவி வருகிறது.

‘கோவிட் – 19’ எனப் பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது. தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்த பஹ்ரைன் சுகாதார அமைச்சகம், தற்போது பஹ்ரைன் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது.

இரானிலிருந்து துபை வழியாக பஹ்ரைன் வந்த பெண்ணுக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இரானில் இதுவரை கொரோனா பாதிப்பால் 8 பேர் பலியாகியுள்ளனர். 43 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply