வயதுக்கு வந்துவிட்டால் பெண்ணுக்கு திருமணம் – நீதிமன்றம் அனுமதி!

இஸ்லாமாபாத் (09 பிப் 2020): பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் கிறிஸ்துவ மதத்தைச் சோ்ந்த 14 வயது ஹுமா என்ற பெண்ணை, வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்ததாக குற்றம் சுமத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடினர்.,

இதுதொடா்பாக சிந்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது, ஹுமாவுக்கு திருமண வயது வரவில்லை என்றாலும், அவருக்கு மாதவிடாய் பருவம் வருவதால் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்கீழ் அவரது திருமணம் செல்லும் என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஹுமாவின் பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த வழக்கு முடியும்வரை ஹுமாவை பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply