இந்திய குடியுரிமை சட்டத்திற்கு உலக அளவில் வலுக்கும் எதிர்ப்பு – இன்னொரு அமெரிக்க நகரசபை தீர்மானம்!

நியூயார்க் (14 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சியாட்டிலை அடுத்து மேலும் ஒரு அமெரிக்க நாட்டின் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது சர்வதேச அளவிலும் பரவியுள்ளது.

உலகின் மிக முக்கிய நாடுகளின் தலைநகரங்களில் பொதுமக்கள் சிஏஏவை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் மற்றொரு அமெரிக்க நகரமான மாசசூசட்சில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரசபை குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சமீபத்திய பாஜகவின் வீழ்ச்சி, மேலும் உலக அளவிலான சிஏஏ எதிர்ப்பு, அமெரிக்க நகரங்களின் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தீர்மானம் ஆகியவை இந்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply