டெல்லி கலவரத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு அளித்த முஸ்லிம்!

Share this News:

புதுடெல்லி (03 மார்ச் 2020): டெல்லி கலவரத்தில் வன்முறை கும்பலால் பாதிக்கப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு அளித்துள்ளார் அய்யூப் அஹ்மது என்ற முஸ்லிம்.

டெல்லியில் கடந்த வாரம் சிஏஏ எதிர்ப்பு போராட்டக் காரர்களிடம், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற பெயரில் புகுந்த வன்முறை கும்பல், நடத்திய இனப்படுகொலையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர், 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறை நடந்தபோது, ஒரு வீட்டுக்குள் நுழைந்த கும்பல் 45 வயது மதிக்கத்தக்க தாயையும், அவரது இரு மகள்களையும், ஆடைகளை களைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது.

ஒருவழியாக அந்த கும்பலிடமிருந்து தப்பித்த தாயும் மகள்களும், சில காயங்களுடன் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். அங்கு அய்யூப் அஹமது என்பவர் தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியுள்ளார். மேலும் அல் ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அவர்களை அனுமதித்துள்ளார்.


Share this News:

Leave a Reply