மத்திய அரசிடம் போராடிக் கொண்டு இருக்கிறோம் – தமிழக அமைச்சர் பரபரப்பு தகவல்!

சென்னை (24 ஜன 2020): மாநிலங்களின் உரிமைகள் மத்திய அரசின் கைக்கு சென்று கொண்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாண்டியராஜன், “மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உணாரணம். ஜி.எஸ்.டி வரிமுறை. ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து நமக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பெற மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஜி.எஸ்.டி வரிமுறை அமல் செய்தபோது, அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, ‘அனைத்து மாநிலங்களும் தங்களது தன்னுரிமையை ஜி.எஸ்.டி கவுன்சிலடம் சமர்பிக்கிறது. மத்திய அரசும் தனது தன்னுரிமையை ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் சமர்பிக்கிறது’ என்பார். ஆனால், இதுநாள் வரை ஜி.எஸ்.டி கவுன்சில் குறித்தான ஒரு தெளிவு இருக்கவில்லை. இது ஒரு உதாரணம்தான். இதைப் போன்று மாநில அரசுகளுக்கு இருக்கும் பல அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் சென்று கொண்டிருக்கின்றன,” என்று பேசினார்.

அதிமுக பாஜக இடையே இருந்த உள் மோதல் சமீபகாலமாக பொது வெளிக்கு வருவதையே இதுபோன்ற பேச்சுக்கள் காட்டுகின்றன.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply