தமிழக பட்ஜெட்டின் (2020) முக்கிய அம்சங்கள்!

Share this News:

சென்னை (14 பிப் 2020): 2020- 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார்.

பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது.

கல்வித் துறைக்கு ரூ.34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடன் 4.56 லட்சம் கோடியாக உள்ளது.

ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும்.
விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கு இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

அம்மா வாகனத் திட்டத்துக்கு ரூ.253.14 கோடி ஒதுக்கீடு.

சுத்திகரிக்கப்பட் நீர் மறுபயன்பாட்டுக் கொள்கை ஏற்படுத்தப்படும்.

கால்நடைத் துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவுப்பூங்கா அமைக்கப்படும்.

அம்மா உணவகத் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

சாலைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் ரூ.500 கோடியாக உயர்த்தப்படும்.

நெடுஞ்சாலைத் துறை பாதுகாப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்.

நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்மார்ட் கார்டு இருந்தால் எந்தக் கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

போக்குவரத்து மானியங்களுக்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு.

வேளாண்துறைக்கு ரூ.11.894 கோடு ஒதுக்கீடு.

1364 நீர்பான பணிகளுக்காக ரூ.500 கோடு ஒதுக்கீடு.

நீர்பாசன திட்டங்களுக்காக ரூ.6991 கோடி ஒதுக்கீடு.

முதல்வரின் பசுமை வீடு திட்டம் – வீடு ஒன்றுக்கு கட்டுமான செலவு ரூ.2,10 லட்சசமாக உயர்த்தப்படும்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்.

சிறைச்சாலைகளுக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு.

சாலை பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.1,403 கோடி ஒதுக்கீடு. சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

நீதி நிர்வாகத்தில் கூ.1,403 கோடு ஒதுக்கீடு.

சென்னையில் வெள்ளி பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

தமிழக காவல்துறைக்கு ரூ.8,876 கோடி

தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

உள்ளாட்சிகளுக்கு ரூ.6.754 கோடு ஒதுக்கீடு.

கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கீழ் தமிழகத்தின் 179 திட்டங்கள் சேர்ப்பு.

வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

கரும்பு விவசாயிகளின் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு.

மதிய உணவு திட்த்துக்கு ரூ.5,935 கோடி

ஆதிதிராவிட் முன்னேற்றத்திற்காக ரூ.4,109 கோடு ஓதுக்கீடு.

ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடு ஒதுக்கீடு.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடு ஒதுக்கீடு.

ஜவுளித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.1,53 கோடி ஒதுக்கீடு.

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடு ஒதுக்கீடு.

மகளிர் நல திட்டங்களுக்கு ரூ.78,796 கோடி ஒதுக்கீடு.

தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்.

புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு.

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.5,500 கோடி.

சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ.12,301 கோடி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ஒதுக்கீடு.

எரிசக்தி துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு.

பள்ளிகலில் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வித்துறைக்கு ரூ.5,052 கோடி ஒதுக்கீடு.

புதிதாக 11 மருத்துவ கல்லூரிகலை நிறுவுவற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.

சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.

கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழில் முனைய மேம்பாட்டு திட்ட ம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.2,19, 375 கோடி.

தமிழகத்தின் மொத்த செலவு ரூ.2,41.601 கோடி

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.22,225 கோடி.

2018-19 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.17% வளர்ச்சி.

2019-20 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27%

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, கடந்த ஆண்டு தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 5% அதிகம்.

வரும் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்திரை தாள் வரி 1% இருந்து 0.25% ஆக குறைப்பு. குறைந்தபட்சமாக ரூ.5000 மிகாமல் வசூலிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு.

இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடி ஒதுக்கீடு.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கா இந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் – முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கப்படும்.

இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த, பணி மேற்கொள்ள ரூ.700 கோடி ஒதுக்கீடு.

பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூ.5439,79 கோடி ஒதுக்கீடு.

2020-21 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்.

7,233 ஏக்கர் ஆக்கரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத்துறைக்கு ரூ.20,115.58 கோடி ஒதுக்கீடு.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.375 கோடி ஒதுக்கீடு.

சேலம் புத்தரகவுண்டன்பாளையம் உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

திருநெல்வேலி கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும்.

4,997 விசாப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.

கீழடியில் கிடைக்கும் பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு.

இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பிடூ ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுப்படுத்தப்படும்.


Share this News:

Leave a Reply