எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி உள்ளது? – மகன் தகவல்!

Share this News:

சென்னை (17 செப் 2020): கொரோனா பாதித்து தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ‘எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது” என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.

கடந்த மாதம் 5ம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் எஸ்பிபி. . அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் தீவிர சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்து வருகின்றனர்.

இந்த தகவலை எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாக சரண் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply