பாவம் ரஜினியின் மகள்!

சென்னை (23 ஜன 2020): துக்ளக் விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசி சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் அவரது சொந்த வாழ்க்கை குறித்தும் சமூக வலைதளங்களில் பேசி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது.

ரஜினி பேசும்போது துக்ளக் மட்டுமே இதனை வெளியிட்டது என்றார். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் அவுட்லுக் பத்திரிகையை ஆதாரமாக காட்டினார் இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, ரஜினி மேலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இது இப்படியிருக்க ரஜினியின் பேச்சுக்கு ரஜினியை மட்டும் விமர்சியுங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் அவரது இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் வாழ்க்கையும் அவரது இரண்டாவது திருமணத்தையும் பலர் ரஜினியின் பேச்சோடு முடிச்சு போட்டு வருகின்றனர். இது சவுந்தர்யாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும் என்பதாகும். “சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணம் பெரியார் போட்டுக் கொடுத்த புரட்சிதான்” என்பது ரஜினியை விமர்சிப்பவர்களின் கருத்தாகும். .

ஆனால் பெரியார் குறித்து கருத்து சொன்ன ரஜினியை மட்டும் விமர்சியுங்கள் அதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. அதை விடுத்து அவரது மகளையோ அல்லது அவரது சொந்த வாழ்க்கையையோ விமர்சிக்க வேண்டாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply