5, 8-ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத வேண்டுமா? – அமைச்சர் விளக்கம்!

Share this News:

சென்னை (21 ஜன 2020): “5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை!” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும்.

5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும். இந்த பொதுத் தேர்வில் சுலபமான கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். மாணவர்களின் திறனைக் கண்டறியவே பிற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு வார விடுமுறையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இனி மார்ச் மாதம் தான் நீட் பயிற்சி வகுப்புகள் நடக்கும்!” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


Share this News:

Leave a Reply