கோவை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பதாகைகளுடன் புதுமண தம்பதிகள்!

கோவை (21 பிப் 2021): கோவை ஆற்றுப் பாலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் தமிழகத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவை ஆற்றுப்பாலத்தில் ஷாஹின் பாக் திடலில் நேற்று (20-2-2020, வியாழக்கிழமை) மணமக்கள் அப்துல் கலாம் – ரேஷ்மா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் CAA,NRC,NPR க்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி போராட்டக் களத்தில் நின்றனர்.

இதேபோன்று சென்னை வண்ணாரப்பேட்டையிலும் (சென்னை ஷஹீன் பாக்) ஒரு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply