மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ளவர்களுக்கு மம்தா மகிழ்ச்சியான தகவல்!

Share this News:

கொல்கத்தா (03 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ள அனைவரும் இந்தியர்கள்தான் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தமான சி.ஏ.ஏ.வை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் காலியாகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ள அனைவருமே இந்திய நாட்டின் குடிமக்களே. அவர்களுக்கு இந்திய குடியுரிமை இருக்கிறது. அவர்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

மேலும் புதியதாக குடியுரிமை கோரி நீங்கள் விண்ணப்பிக்க வேண்டாம். நீங்கள் இந்த நாட்டின் தேர்தல்களில் வாக்களிக்கலாம். இந்த தேசத்தின் பிரதமர், முதல்வரை தேர்ந்தெடுக்கலாம். சிலர் நீங்கள் இந்த தேசத்தின் குடிமக்கள் இல்லை என்று கூறுவார்கள். அவற்றையெல்லாம் நம்ப வேண்டாம். குடியுரிமை விவகாரத்தில் ஒருவரைக் கூட மேற்கு வங்கத்தில் இருந்து நாங்கள் வெளியேற்ற மாட்டோம் என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக மேற்கு வங்கத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக அமித் ஷா நடத்திய பேரணியில் குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply