பெண்கள் ஆடை அவிழ்ப்பதை வீடியோவாக எடுத்த ஊழியர் – விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

Share this News:

கோவை (07 ஜன 2020): பெட்ரோல் பங்கில், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை செல்போன் காமிராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனி அருகே உள்ளது. இங்கு பணியாற்றும், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவது, செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

இந்நிலையில் இந்த வீடியோ பதிவு பற்றி, பெண் ஒருவர் நிர்வாகத்தில் அளித்த புகாரின் பேரில் தான், சுபாஷ் என்ற ஊழியர் பணியிலிருந்து நீக்கப்பட்டான் என்றும், அப்போது, அந்த வீடியோவை பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, டெலிட் செய்துவிட்டான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், எப்படியோ, அந்த வீடியோ இன்னொரு ஊழியரான மணிகண்டன் தரப்புக்குச் சென்ற நிலையில், வைரலானதாகவும், அதன்பின்னரே, இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பெண் ஊழியர்கள் உடைமாற்றும் அறையின் சூப்பர்வைசராக, பெண்கள் நியமிக்கப்படுவது தான், நடைமுறை. ஆனால், கோயம்புத்தூர் ரூட்ஸ் பெட்ரோல் பங்கில், அது தலைகீழாக நடைபெற்று, ஆண் நபரான சுபாஷ் எப்படி நியமிக்கப்பட்டிருந்தது ஏன் எனபதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

இதில் ஊழியர்களுக்கு மட்டும்தான் தொடர்பா? அல்லது உரிமையாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.


Share this News:

Leave a Reply