அதிமுகவுக்கு எச்.ராஜா பகிரங்க மிரட்டல்!

Share this News:

திருவண்ணாமலை (27 பிப் 2020): சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் தமிழக ஆட்சி கவிழும் என்று எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, “. தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அப்படி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும்.

திமுகவை இந்து விரோத கட்சியே அல்ல என்று அதன் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். சமயபுரத்துக்கு ஸ்டாலின் பால் குடம் எடுக்கும் வரை இதனை நான் நம்பமாட்டேன். திமுக பிராமணர் எதிர்ப்பை கொள்கையாக கொண்டது. ஆனால் தற்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரை ஆலோசகராக வைத்துள்ளது வேடிக்கை” என்று எச்.ராஜா பேசினார்.


Share this News:

Leave a Reply