ஒரிஜினலை காட்டுங்கள் – ரஜினி விவகாரத்தில் எச்.ராஜா கேள்வி!

Share this News:

சென்னை (21 ஜன 2020): “முரசொலி பத்திரிகை அலுவலகத்தின் மூலப் பத்திரத்தை காட்டுங்கள்!” என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என பெரியார் அமைப்புகள் தெரிவித்துள்ளன. திக தலைவர் கி.வீரமணி, “ரஜினி தக்க விலை கொடுத்தாக வேண்டும்!” என தெரிவித்துள்ளதோடு, ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, outlook பத்திரிகையின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே பேசினேன், எனவே மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்தார். மேலும் அவுட்லுக் பத்திரிகையில் நகலை, பெரியார் விவகாரத்திற்கு ஆதாரமாக காட்டினார்.

இதற்கும் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. மேலும் ரஜினி பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகைச் செய்தியின் நகலைக் காட்டியதற்கு திக-வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் என திமுகவையும், திராவிடர் கழகத்தையும் சீண்டியுள்ளார் எச்.ராஜா.

ஏற்கனவே எச்.ராஜா, “திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை!” என்றும் “பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் ரஜினி மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது!” என்று கூறியிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த சீண்டலுக்கு திமுக மற்றும் திகவினர் மறுப்புக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில், “எச். ராஜா அவர்களே! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உங்களிடம் ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம்” என்றும் “இந்திய அளவில் அதிக பொய் செய்திகளை உருவாக்கி பரப்புவது பாஜக, மோடி ஆதரவாளர்கள் தான்!” என்றும் “இதை ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி ஆய்வறிக்கையில் கூறியுள்ளது!” என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply