வடமாநிலமாக மாறும் தமிழகம் – மூன்றாம் வகுப்பு சிறுமி வன்புணர்ந்து கொலை!

சிவகாசி (21 ஜன 2020): சிவகாசி அருகே மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி, கொங்கலாபுரத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 3ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று மாயமானார். சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை முட்புதர் அருகே, அந்த சிறுமி சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர் வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன.

சிறுமியின் உடலை கைபற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநிலங்களில் தொடர்ந்து கேள்வியுறும் இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக தமிழகத்தில் அடிக்கடி நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply