சோவே பைத்தியம் என்று சொல்லிட்டார் (வீடியோ) – ரஜினியை கலாய்த்த திமுக எம்.பி!

Share this News:

சென்னை (16 ஜன 2020): துக்ளக் படித்தால் பைத்தியம் பிடிக்கும் என்று சோவே சொல்லும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திமுக எம் பி செந்தில்குமார்.

துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய ரஜினிகாந்த் “முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம்.” என்றார்.

இதனை நெட்டிசன்கள் பல வகைகளில் கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில், திமுகவின் தர்மபுரி எம்பி, செந்தில் குமார், சோ மற்றும் ரஜினியை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பழைய திரைப்படம் ஒன்றில் சோ ராமசாமி, துக்ளக் இதழை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று, “இந்த பத்திரிகையா… என்ன எல்லாரையும் இப்படி திட்டுறான். இதைப் படிச்சிட்டிருந்தா நம்பள பைத்தியக்காரங்கனு சொல்லிடுவாங்க,” என்று சொல்லி அதை தூக்கி எறிகிறார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ


Share this News:

Leave a Reply