நாடே அல்லோலப்பட்டு கிடக்குது, உங்களுக்கு காதல் கேட்குதா – கொந்தளிக்கும் மக்கள்!

Share this News:

மதுரை (27 மார்ச் 2020): கொரோனா அறிகுறிகளுடன் கொரோனா முகாமில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் செயலால் ஒட்டு மொத்த மக்களும் ஆதங்கத்தில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், துபாயிலிருந்து கடந்த 21-ம் தேதி மதுரை வந்தார். அவரை சோதனை செய்தபோது கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தது. அதனால் அவரை சின்ன உடைப்பு சிறப்பு முகாமில் வைத்துக் கண்காணித்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று அங்கிருந்து அவர்  தப்பிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் அவர் திருமணம் செய்யவிருந்த பெண்ணைச் சந்திக்க ஊருக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. உடனே அவரை மீட்டு மீண்டும் கொரோனா முகாமிற்கு கொண்டு வந்தனர்.

மேலும் அந்த இளைஞரின் செயலால், அவர் திருமணம் செய்யவிருந்த பெண் உட்பட அவர் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அனைவரும் கொரோனா கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுள்ளனர். மேலும் அவர் யாரோடெல்லாம் தொடர்பு வைத்திருந்தார் என்றும் ஆராயப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகள் கொரோனா விவகாரத்தில் மிகுந்த கவனம் காட்டி வரும் நிலையில் இவர்களுக்கு காதல் ஒரு கேடா? என்கின்றனர் பொதுமக்கள்.


Share this News:

Leave a Reply