முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு!

Share this News:

நெல்லை (05 ஏப் 2020): முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 75 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு முஸ்லிம்கள் காரணம் என்ற அவதூறுகள் பரப்பலும் ஒருபுறம் வந்தபடி உள்ளன. இதில் மரிதாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து நெல்லை போலீசார் மரிதாஸ் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply