மதம் கடந்த நட்பு – முகமதுஅசன் ஆரிபின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராஜசேகர்!

வேதாரண்யம் (31 மே 2020): எல்லா மதமும் மனிதத்தைத்தான் போதிக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம் அப்துல் ரஹீம், ராஜசேகர் நட்பு. வங்க தேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் இவர் ஓமனில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஒமனில் முத்துப்பேட்டை அருகே உள்ள வேதாரண்யத்தை சேர்ந்த ராஜசேகரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்துல் ரஹீமின் சகோதரி மகன் 9 வயது முஹம்மது அசன் ஆரிஃப் என்ற சிறுவனின் இதயத்தில் ஓட்டை உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள்…

மேலும்...

இந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத் (15 மே 2020): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி லாக்டவுன் காலத்தில் இந்து கோவில்களில் ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தார். தனது நிவாரணப் பணிகளின் புகைப்படங்களைப் சமூக வலைதலங்களில் பகிர்ந்து கொண்டுள்ள அப்ரிடி, , “நாங்கள் கொரோனாவை ஒழிப்பதில் ஒன்றாக இருக்கிறோம், அதேபோலை இதில் ஒன்றாகவே வெற்றி பெறுவோம். ஒற்றுமை எங்கள் பலம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ஸ்ரீ லட்சுமி நரேன் கோவிலுக்குச் சென்று உதவினேன்” என்று தெரிவித்துள்ளார். அப்ரிடியின்…

மேலும்...

சொந்த நிலத்தை விற்று ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் சகோதரர்கள்!

பெங்களூரு (25 ஏப் 2020): லாக்டவுனால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தங்களது சொந்த நிலத்தை விற்று மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர் முஜம்மில் மற்றும் தஜம்முல் முஹம்மது சகோதரர்கள். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரும், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள், அனாதையாக கூலி வேலை பார்த்து இன்று வரை ஒன்றாகவே இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இருவரும் நிலம் பேசி விற்கும் ஏஜெண்ட்களாக பணிபுரிந்து வருகின்றனர். எனினும் சொந்தமாக அவர்களுக்கு வீடு இல்லை. இதற்காக…

மேலும்...

கொரோனா வைரஸ்: 400 ஐ தொட்ட பலி எண்ணிக்கை – உதவியை நாடும் சீனா!

பீஜிங் (04 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 425 ஐ தொட்டுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த புதிய ‘கரோனா’ வைரஸ்…

மேலும்...

தர்பார் தோல்விக்கு அரசு உதவும் – பரபரப்பை ஏற்படுத்தும் அமைச்சர்!

சென்னை (04 பிப் 2020): தர்பார் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெரிய நடிகர்கல் நடிக்கும் திரைப்படங்களின் டிக்கெட் தொகை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் திரைத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ…

மேலும்...

தயவு செய்து உதவுங்கள் – சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சி தகவல்!

பீஜிங் (27 ஜன 2020): “சீனாவில் 90 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்; எங்களுக்காக உதவுங்கள்!” என்று செவிலியர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 1,970 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 80 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், வுஹானில் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும்…

மேலும்...

பண மதிப்பிழப்பால் பாதிக்கப் பட்ட பாட்டிக்கு உதவிய திமுக எம்.எல்.ஏ!

வேலூர் (14 ஜன 2020): பண மதிப்பிழப்பால் பழைய 500 ரூபாய் நோட்டுகளை இன்றும் வைத்துக் கொண்டு திண்டாடிய பாட்டிக்கு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் உதவியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திடீரென ரூ 500 மற்றும் 1000 செல்லாது என அறிவித்தார். இதனால் நாடே திக்கு முக்காடியது. பலர் செய்வதறியாது தவித்தனர். வங்கிகளில் காத்து கிடந்த மக்கள் பல சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் வேலூர் மாவட்டம் லவன்பேட்டை சூளைமேட்டை சேர்ந்த…

மேலும்...

ஐயப்ப பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமுமுகவினர்!

தென்காசி (07 ஜன 2020): ஐயப்ப பக்தர்களின் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்த பக்தர்களுக்கு தமுமுகவினர் அடைக்கலம் கொடுத்து அலுவலகத்தில் தங்க வைத்தர்னர். தென்காசி மாவட்டம் பண்பொழியில் நேற்று இரவு (6-1-2020) விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவர்கள் சபரிமலை செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் தங்குவதற்கு அருகில் இடமின்றி தவித்தனர். இந்நிலையில் ஜயப்ப பக்தர்கள் தங்குவதற்காக பண்பொழி தமுமுக அலுவலகத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.

மேலும்...