தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர்!

மெல்போர்ன் (21 பிப் 2021): ஆஸ்திரேலியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். ஆஸ்திரேலியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள. அதுகுறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ‘நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது….

மேலும்...

கிரிக்கெட் வீரர்கள் முஹம்மது சிராஜ், பும்ரா மீது இனவெறி சீண்டல்!

சிட்னி (10 ஜன 2020): இந்திய கிரிக்கெட் வீரர்கள் முஹம்மது சிராஜ், பும்ரா மீது கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இனரீதியாக மேற்கொண்ட சீண்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா (பிசிசிஐ) -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். இந்நிலையில்…

மேலும்...

உலக நன்மைக்காக இந்தியா- ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும் – பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ஆலோசனை நடத்தினார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதிகளையும் பாதித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என்றார். மேலும், ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா உறவு மிகவும்…

மேலும்...

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

புதுடெல்லி (29 ஜன 2020): தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தத் தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள்…

மேலும்...

இந்தியா அபாரம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று சாதித்தது!

பெங்களூரு (19 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை….

மேலும்...

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – (VIDEO)

மும்பை (16 ஜன 2020): இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் பிசிசிஐ அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே மும்பையில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது, பார்வையாளர்கள் ‘No CAA-NRC-NPR’ என்ற வாசகங்களுடன் டீ சர்ட் அணிந்து இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் இதனை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து…

மேலும்...

ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இந்தியா!

மும்பை (14 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா – இந்தியாவின் பிசிசிஐ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. துணை கேப்டன் ரோஹித் சா்மா-ஷிகா் தவன் இருவரும் தொடக்க வரிசை வீரா்களாக களமிறங்கிய நிலையில், 2 பவுண்டரியுடன் 10 ரன்களை எடுத்திருந்த ரோஹித், ஸ்டாா்க் பந்துவீச்சில் வாா்னரிடம் கேட்ச்…

மேலும்...

10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா உத்தரவு!

சிட்னி (08 ஜன 2020): கடும் வறட்சி காரணமாக சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் ஆஸ்திரேலிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்காக அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன….

மேலும்...