இறப்பு விகிதத்தைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (17 ஆக 2020): இறப்பு எண்ணிக்கையப் பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா இறப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அனைத்து உயிரிழப்புகளுக்கும் கொரோனா காரணம் இல்லை. கொரோனா நோயாளிகளில் 10 சதவீதம் பேர்…

மேலும்...

கொரோனா நோயாளிகளை மருந்தே இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (27 ஜூன் 2020): 40 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு மருந்தோ, ஊசியோ இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி ஆகியோர் கலந்து கொண்ட நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் கூறும்போது,…

மேலும்...

தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!

சென்னை (28 மே 2020): கொரோனாவை எதிர்த்துப் போராடும் எங்கள் உழைப்பை கொச்சைப் படுத்தாதீர்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இன்று 12246 பேருக்கு இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. 4,55,356 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் தமிழகம் சிறப்பாக…

மேலும்...

தமிழகத்திலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (23 மார்ச் 2020): தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை உலக அளவில் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்திற்கும்…

மேலும்...

விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சிலருக்கு தனிமையில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விதிகளை மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கிறது. இந்நிலையில், ‘வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்’ என்று தமிழக அரசு, சிலருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதையும்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூன்றாக உயர்வு!

சென்னை (19 மார்ச் 2020): தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் கரோனா பாதிப்பு மூன்றாக உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின்…

மேலும்...

தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – தனிமைப் படுத்தப்பட்ட 2984 பேர்!

சென்னை (18 மார்ச் 2020): தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த இளைஞர் 20 வயதுடையவர். அவர் ரயில் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்….

மேலும்...

கொரோனா வைரஸ் – தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சென்னை (13 மார்ச் 2020): தமிழகத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது ரத்தப் பரிசோதனையில், கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் முழுவதும் குணமடைந்துவிட்டதாக தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும்…

மேலும்...

சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மரணம்!

புதுக்கோட்டை (12 ஜன 2020): புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி…

மேலும்...