முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): ஜம்மு காஷ்மீரில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷா பைசல். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆ,ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து 2019 மார்ச் 16-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்கிடையே, கடந்த…

மேலும்...

உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஒமர் அப்துல்லாவின் தங்கை!

புதுடெல்லி (10 பிப் 2020): பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி அவரது தங்கை சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது…

மேலும்...

முன்னாள் முதல்வர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம் – ப.சிதம்பரம் அதிர்ச்சி!

சென்னை (07 பிப் 2020): ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளமை அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த…

மேலும்...