வெட்கக்கேடானது – குஷ்பு அதிரடி கருத்து!

கோவை (08ன் ஜன 2023): தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து…

மேலும்...
ரேசன் அரசி சாப்பாடு

புழுத்த அரிசியும் பறிபோன ஆட்சியும் – ஒரு நினைவலை!

இப்போது அரசு இரண்டாம் முறை தந்த வாய்ப்பில், எங்கள் வீட்டு ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்றிய பின், அரசு வழங்கிய பொங்கல் பரிசாக ₹2500/-, பிரம்பு போன்று மெலிந்த ஒரு கரும்பு, 1 kg அளவுக்குப் பச்சரிசி, 1 kg சீனி, ஆறேழு அண்டிப் பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் ஆகியவை கிடைத்தன. — ஒரு வாரம் கழித்து, பொங்கல் வேட்டி கிடைத்தது. ரேஷன் கடைக்காரன் சேலையைப் பதுக்கிவிட்டான் போல. இரண்டில் ஒன்று தான் எனச்சொல்லி விட்டான்….

மேலும்...

வயிறு எரியுது – ராமதாஸ் வேதனை!

சென்னை (21 ஜன 2020): பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது “வயிறு எரிவதாக” பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும்….

மேலும்...

இவ்வருட பொங்கலுக்கு செம்ம பிஸினஸ் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது….

மேலும்...

தமிழர்களுக்கு கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து – வீடியோ!

கனடா (16 ஜன 2020): பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தைத்திருநாளான முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.மேலும் கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின்…

மேலும்...

தஞ்சை அருகே கார் மோதி நான்கு பேர் பலி – பொங்கல் தினத்தில் சோகம்!

தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூர் அருகே கார் மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வல்லம் புதூர் பகுதியில் ஜெபக்கூடம் உள்ளது. இதில், பொங்கல் திருநாளையொட்டி புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் வல்லம்புதூரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் – திருச்சி முதன்மை சாலையிலுள்ள அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில்…

மேலும்...

தமிழகம் முழுவதும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை (15 ஜன 2020): தமிழர் திருநாளாம் தை முதல் நாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்பாடு, கலாச்சாரம் மற்றும் விவசாயத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் புது வண்ணம் பூசியும், அலங்காரத் தோரணங்களைக் கட்டியும், வண்ணக் கோலமிட்டும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் உறவினர்கள், நண்பர்கள் சூழ இணைந்து கொண்டாடுகின்றனர்.

மேலும்...

பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்!

மதுரை (12 ஜன 2020): பொங்கல் பண்டிகைக்காக எட்டையபுரம் ஆட்டு சந்தையில் குட்டி ஆடு முதல் கறிக்கான ஆடுகள் வரை சுமார் ரூ.ஐந்து கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆட்டு சந்தை. பிரதி சனிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் அதிகாலை ஐந்து மணிக்கே விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் கூடி சந்தை…

மேலும்...