பிரதமர் மோடியின் தாய் காலமானார்!

அகமதாபாத் (30 டிச 2022): பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி காலமானார் உடல் நலக்குறைவால் குஜராத் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் மோடி இன்று (30 டிச 2022) வெள்ளிக்கிழமை காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும்...

தாயின் ஆசையை நிறைவேற்றிய விமானி அமீர் ரஷீத்!

ரியாத் (28 டிச 2022): பல வருடங்களுக்குப் பிறகு தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய மகனின் சமூக வலைதள பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமீர் ரஷீன் வானி என்கிற விமானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் “புனித மக்காவிற்கு செல்ல வேண்டும் என்பது எனது பள்ளிப் பருவத்திலிருந்தே தனது தாயின் ஆசையாக இருந்தது, அதனை நான் இயக்கும் விமானத்திலேயே அழைத்துச் சென்று தற்போது நிறைவேற்றியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அமீரின் ட்வீட்டில்,…

மேலும்...

கொரோனா கொடூரம் – தாயை வீதியில் தவிக்க விட்ட மகன்கள்!

திருச்சி (14 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தால் பெற்ற தாயை வீதியில் வீதியில் தவிக்க விட்டுள்ளனர் இரண்டு மகன்கள். திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்.பி.டி நகரைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் குமார் தன்னுடன் இருந்த தாயை வீட்டின் வெளியே தனியே விட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வீட்டின் வெளியே…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

ரியாலிட்டி ஷோ-வில் சோகம் – மகள் பாடும்போது தாய் மரணம் (VIDEO)

ஜகார்த்தா (25 ஜன 2020): ரியாலிட்டி ஷோ-வுக்கான தேர்வு (ஆடிஷன்) நிகழ்ச்சியில், மகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தபோதே தாய் மரணித்த சம்பவம் பலரது இதயத்தை பிழிவதாக அமைந்துள்ளது. ஜகர்த்தா : இந்தோனேசியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை டிவி.,யில் பார்த்தபடியே தாய் உயிரிழந்த சம்பவம், கேட்போரை கலங்க வைத்துள்ளது. இந்தோனேசியாவில் லிகா தங்தத் ரியாலிட்டி ஷோ (பாடல் போட்டி) நடந்து வருகிறது இதில் வெல்பவருக்கு 28,000 யூரோ…

மேலும்...

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் இருக்க வாய்ப்பு!

புதுடெல்லி (17 ஜன 2020): மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. செல்லிடப்பேசி எண் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்புடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு மட்டுமே கேட்கப்படவுள்ளன. தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி…

மேலும்...