ஹிஜாப் அணிந்தால் வேலையில்லை – அதிர வைக்கும் தகவல்!

நெதர்லாந்து ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளில் ஹிஜாப் அணிந்து வேலைக்கு விண்ணப்பிக்கும் 65 சதவீத பெண்கள் நிராகரிக்கப்படுவதாக அதிச்சித்தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​ஹிஜாப் படங்களைத் தங்கள் CV உடன் இணைக்கும் முஸ்லீம் பெண்கள், தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்காமலேயே நிராகரிக்கப்படுகின்றனர். இந்த மூன்று நாடுகளிலும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் எந்த அளவிற்கு இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது கள ஆராய்ச்சியின் மூலம் வெளியாகியுள்ளது. இது…

மேலும்...

ஜெர்மனி பெல்ஜியம் நாடுகளில் மழை வெள்ளத்தால் 1300 பேர் மாயம்!

ஜெர்மனி (17 ஜூலை 2021): மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1300 பேர் மாயமாகியுள்ளனர். 125 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பாவில் வியாழன் அன்று பெரும் மழை பொழிவு ஏற்பட்டதால், பல நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகள் உடைந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் பாய்ந்தது. ரைன், அஹர், மீசே ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு பெரிய அளவில் உருவானதால், ஜெர்மனியின் தென் மேற்கு பகுதிகளில் ஏராளமான வீடுகள்,…

மேலும்...

முஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்

பெர்லின் (24 மே 2020): ஜெர்மனியில் சமூக விலகலுடன் தொழுகை நடத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயத்திலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகளில் தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் சமூக விலகல் விதிமுறைகளின்படி தேவாலயங்கள், மசூதிகளை திறந்து வழிபாடு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இப்படியிருக்க ஜெர்மனியின் பெர்லின் நியோகோலின் மாவட்டத்தில் உள்ள தார் அல்…

மேலும்...

ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

ஜெர்மனி (20 பிப் 2020): ஜெர்மனியின் ஹனாவ் நகரில் இரு வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தென்மேற்கு ஜெர்மனியின் ஹனாவ் நகரில் புதன்கிழமை பிற்பகல் 2 பார்களில் மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் தாக்குதல் நடந்த இடத்தில் இரவு 10 மணியளவில் இருண்டான பகுதியில் வாகனம் காணப்பட்டதாகவும், இரண்டாவது…

மேலும்...