ஹிஜாபை கழற்றிய நடிகை கைது!

தெஹ்ரான் (21 நவ 2022): இரான் திரைப்பட நட்சத்திரம் ஹெங்கமே காசியானி ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவில் ஹிஜாப் அணியாமல் தோன்றியதால் அவர் கைது செய்யப்பட்டார். காசியானி இன்ஸ்டா பதிவில், ஹிஜாப் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இதுவே தனது கடைசி இடுகையாக இருக்கலாம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனக்கு என்ன நேர்ந்தாலும், எனது கடைசி மூச்சு வரை ஈரானியர்களுடன் இருப்பேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்று காசியானி தெரிவித்துள்ளார்.

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இரானில் 6 பேர் பலி!

தெஹ்ரான் (23 பிப் 2020): இரானில் கொவைட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442ஆக ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு…

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத்தைத் தகர்த்தது நாங்கள் தான் – ஈரான் அதிர்ச்சி ஒப்புதல்!

தெஹ்ரான் (11 ஜன 2020): அமெரிக்கப் படைகளை நோக்கி ஏவிய ஏவுகணை, தவறுதலாக உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தைத் தாக்கியது உண்மைதான் என ஈரான் சற்றுமுன் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள்: ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று வதந்திகள் பரவி வந்தது….

மேலும்...

ஈரான் விமான விபத்து – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

தெஹ்ரான் (10 ஜன 2020): ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உக்ரைன் விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு, ஈரான் தனது ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது வீசி…

மேலும்...

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை – அமெரிக்கா விருப்பம்!

நியூயார்க் (09 ஜன 2020): இரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை அமெரிக்க வான்வெளி தாக்குதல் மூலம் வெள்ளிக்கிழமை கொலை செய்தது. இந்த சம்பவத்தால் ஈரானில் பெரும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈராக்கின் அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதில் உள்ள சேத விவரங்கள் குறித்து அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே ஐ.நாவுக்கு அமெரிக்க அதிபர் கடிதம் எழுதியுள்ளார். ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி…

மேலும்...

இந்தியா மிகப்பெரிய பொருளாதார அழிவை சந்திக்கும் – அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி (09 ஜன 2020): அமெரிக்க ஈரான் போர் வந்தால் இந்தியா பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா ஈரான் இடையே போர் வருமோ என்ற அச்சம் உள்ள நிலையில், இந்தியாவில் இதன் தாக்கத்தை சாமானிய மக்கள் வரை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பிரச்னையால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு என்பது பல லட்சம் கோடிகளில் தான் கணக்கிட முடியும். இந்தப் பிரச்சனையால் ஈரானின் பொருளாதாரம், 0.3 சதவிதம் வரை பாதிக்கப்படும்…

மேலும்...

ஈரான் விமான விபத்தில் பயணிகள் அனைவரும் பலி!

தெஹ்ரான் (08 ஜன 2020): உக்ரேன் விமான விபத்தில் பயணம் மேற்கொண்ட 176 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பயணிகளும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்...

ஈரான் அமெரிக்கா போர் பதற்றம் – இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி (08 ஜன 2020): ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியர்களுக்கும், இந்திய விமான நிறுவனங்களுக்கும் இந்திய அரசு அறிவுறுத்தல் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள், ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் வான் வழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஈராக்கில் வசிப்போர் அந்நாட்டுக்குள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஈராக் நாட்டுக்குச் செல்வதை இந்தியர்கள்…

மேலும்...

ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

ஈரான் (08 ஜன 2020): ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. 180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம், இரானின் தெஹ்ரானுக்கு அருகில் விழுந்து நொறுங்கியுள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாக வில்லை.

மேலும்...

அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் (08 ஜன 2020): இராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதலை பென்டகன் உறுதி செய்துள்ளது. இராக்கின் அமெரிக்க துருப்புகள் மீது, ஏராளமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுதவிர வேறு எந்த சேத விவரங்களையும் பென்டகன் தெரிவிக்கவில்லை.

மேலும்...