
நமக்கு உணவளிப்பவர்களின் கோரிக்கைக்காக நேரம் ஒதுக்க முடியவில்லையா? – ஹர்பஜன் கேள்வி!
புதுடெல்லி (29 நவ 2020): நாளுக்கு நாள், நாட்டில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாலிவுட் நட்சத்திரம் டாப்சிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டிவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இட்டுள்ள பதிவில், “விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுக்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் குரலை செவி கொடுத்து கேட்க…