புதிய பல்கலைக் கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர்!

சென்னை (17 செப் 2020): விழுப்புரத்தில் புதிதாக தொடங்க இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பதாக நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டாகப் பிரிக்கப்படும் பல்கலைக் கழகத்தின் ஒரு பிரிவிற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது குறித்த ஆலோசனையில் உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே விழுப்புரத்தில் அமைய…

மேலும்...

அவனுங்களை தூக்கில் போடுங்கள் – கதறும் ஜெயஸ்ரீயின் பெற்றோர் – வீடியோ!

விழுப்புரம் (12 மே 2020): விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். விவசாயக் கூலி வேலை செய்துவரும் ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஜெயபாலும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில், மூத்த மகளான ஜெயஸ்ரீ (15) மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார். சுமார் 11 மணியளவில் ஜெயபால்…

மேலும்...

குற்றவாளிகளை தூக்கிலிட இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? – கொதிக்கும் நெட்டிசன்கள்!

விழுப்புரம் (12 மே 2020): சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொன்றவர்களை தூக்கிலிட சிறுமியின் மரண வாக்குமூலமே போதுமானது என்று பொதுவான கருத்து நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத்…

மேலும்...

அதிமுகவினரின் கொடூரச் செயல் – 15 வயது சிறுமி எரித்துப் படுகொலை!

விழுப்புரம் (11 மே 2020): விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது சிறுமி ஒருவர், அ.தி.மு.க.வினர் இருவரால் எரித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் தரப்பினருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் வீட்டிற்கு நேற்று கலியபெருமாள் மற்றும் முருகன்…

மேலும்...

அரசுப் பேருந்து திடீர் கட்டணக் குறைப்பு!

விழுப்புரம் (06 மார்ச் 2020): விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்படும் புகா் சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச பயணக் கட்டணம் வியாழக்கிழமை முதல் குறைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் 8 கோட்டங்களாக செயல்பட்டு வரும் அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்துகளின் பயணக் கட்டணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் உயா்த்தியது. இந்த நடவடிக்கை விமா்சனத்துக்குள்ளானபோதும், விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு பேருந்துகளுக்கு…

மேலும்...

விழுப்புரம் அருகே பயங்கரம் – தலித் இளைஞர் அடித்துக் கொலை!

விழுப்புரம் (16 பிப் 2020): விழுப்புரம் அருகே தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கும், பெட்ரோல் பங்கிற்கும் இடையிலான தொலைவு அதிகம் என்பதால், இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவுப்பணிக்கு சென்ற அவர், புதன்கிழமை காலை வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிதுநேரத்தில், சக ஊழியரிடமிருந்து…

மேலும்...

விழுப்புரத்தில் பயங்கரம் – பெட்ரோல் பங்க் மேலாளர் குண்டு வீசி கொலை!

விழுப்புரம் (04 பிப் 2020): விழுப்புரத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கம்பன் நகரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில், பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (55) மேலாளராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமையும் பணியில் இருந்தார். பகல் 11 மணியளவில் காரில் வந்த 4 மர்ம நபர்களும், பைக்கில் வந்த 2 மர்ம நபர்களும் பெட்ரோல் பங்கில் டீசல் பிடிப்பது போல் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பெட்ரோல்…

மேலும்...