கன்னியாகுமரி தொகுதியில் யார் போட்டி? -வசந்தகுமார் மகன் விளக்கம்!

சென்னை (04 செப் 2020): காங்கிரஸ் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செய்ல்படவுள்ளதாக மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமாி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் சில தினங்களுக்கு முன் கரோனா தாக்குதலால் உயிாிழந்தாா். சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அவா் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், “அப்பாவின் இழப்பு எங்களையும் தாண்டி…

மேலும்...

ஈடு செய்ய முடியாத இழப்பு – சிம்பு இரங்கல்!

சென்னை (30 ஆக 2020): எம்பி. வசந்தகுமார் காலமானதற்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று இரவு நடிகர் சிம்பு மறைந்த எம்.பி. வசந்தகுமார் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும். விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் எனத் தொடங்கி வைத்தவர். கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தைக் கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர். குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக்…

மேலும்...

கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் – வசந்தகுமார் இறந்தது எதனால்?

சென்னை (29 ஆக 2020) காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வசந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , “சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அப்பா 6.56-க்கு இயற்கை எய்தினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பா மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்‌ஷன்…

மேலும்...

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (28 ஆக 2020): கொரோனா பாதித்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் சென்னையில் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நங்குநேரி வசந்தகுமார் எம்.பி. கடந்த 10 ஆம் தேதி, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஆகஸ்ட் 28 ) உயிரிழந்தார். காங்கிரஸ்…

மேலும்...