லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார். பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த தேஜஸ்வினி, அங்கேயே தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார். அவர்…

மேலும்...

லண்டன் ஹரே கிருஷ்ணா இஸ்கான் ISKCON ஆலயத்தில் கடுமையான கொரோனா பாதிப்பு!

லண்டன் (07 ஏப் 2020): கொரோனா COVID-19 வைரஸால் இங்கிலாந்திலுள்ள ஹரே கிருஷ்ணா அமைப்பான இஸ்கான் (ISKCON) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலண்டனிலுள்ள அந்த கோயிலைச் சேர்ந்தவர்களுள் இருபத்தொன்று பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பக்தர்கள் மரணமடைந்துள்ளார்கள். இறந்தவர்களின் பெயர்கள் அவர்களது குடும்பத்தினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர்களுள் ஒருவர் பக்தி சாரு சுவாமியின் சீடரான, எழுபது வயதைக் கடந்த ராமேஸ்வர தாஸ் ஆவார். இங்கிலாந்தில் உள்ள பல கோயில்களுக்கு இவர் ஆலோசனை மற்றும் வழிகாட்டியுமாவார்….

மேலும்...

லண்டன் மசூதியில் பரபரப்பு – இமாம் மீது கத்தி குத்து- கைதானவனிடம் போலீஸ் தீவிர விசாரணை!

லண்டன் (23 பிப் 2020): லண்டன் மசூதியில் தொழுகை நடத்தும் இமாம் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய லண்டனில் 1944ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மசூதி ஒன்று உள்ளது. அங்கு தொழுகைக்காகவும் சுற்றிப் பார்க்கவும் கூட்டம் வருவது வாடிக்கை. இந்நிலையில் தொழுகையை வழிநடத்தும் இமாம் மீது ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான். இமாமுக்கு வயது 70. சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளிவாசலில் கிட்டத்தட்ட 100 பேர் இருந்ததாக…

மேலும்...

முன்னாள் முதல்வரின் மகன் மர்ம மரணம்!

லண்டன் (12 பிப் 2020): அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வரின் மகன் லண்டனில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வராக இருந்தவர் காங்கிரசைச் சேர்ந்த கலிக்கோ புல். இவரது மகன் ஷுபான்சோ புல் (20) என்பவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சசெக்ஸில் பிரைட்டன் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் இறந்து கிடந்துள்ளார். தற்போது ஷுபான்சு உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பணிகள் நடைபெற்று…

மேலும்...

நோயாளிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

லண்டன் (08 பிப் 2020): நோயாளிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட இந்திய மருத்துவருக்கு, மூன்று ஆயுள் தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லண்டனில் மருத்துவம் பயின்று அங்கேயே சிகிச்சை அளித்து வரும் இந்திய மருத்துவர் மனீஷ் நட்வர்லால் ஷா. இவர் மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக நோயாளிகள் மனீஷ் மீது குற்றம் சுமத்தினர் . மேலும் பெண் நோயாளிகள் வந்தால் அவர்களிடம் மர்ம உறுப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியும் பயமுறுத்தியும்…

மேலும்...

லண்டனில் மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொலை!

லண்டன் (02 பிப் 2020): மர்ம நபர் ஒருவனை லண்டன் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். லண்டன் ஸ்ட்ரெட்ஹாம் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் தொடர்புடையவர்கள் வேறு யாரும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இன்று, ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும்...