சேதமடைந்த மெரீனா மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை இன்று மீண்டும் திறப்பு!

சென்னை (16 டிச 2022): புயலால் சேதமான மெரீனா மாற்றுத் திறனாளிகள் மரப்பாதை மறு சீரமைக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. ரூ.1.14 கோடி செல்வில் அமைக்கப்பட்ட இந்த பாதை நவம்பர் 27ல் திறக்கப்பட்டது. இது சமீபத்தில் ஏற்பட்ட மாண்டோஸ் புயல் காரணமாக ஒரு பகுதி சேதமடைந்தது. இந்நிலையில் சீரமைப்புப் பணிக்காக மரப்பாதை வழி மூடப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து இன்று இந்த மரப்பாதை மீண்டும் திறக்கப்படுகிறது.

மேலும்...