தமிழக எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் மரணம்!

சென்னை (23 மார்ச் 2021): அதிமுக மாநிலங்களவை எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் காலமானார். சட்டமன்றதேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது. முகமது ஜான்.2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

மேலும்...