அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜக தலைவர்!

ராணிபேட்டை (03 ஜன 2020): தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே தமிழத்தில் ஆட்சி செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்.முருகன், “ முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனக் கூறினார். அவரது இந்தக் கருத்திற்கு எதிர்வினை ஆற்றிய, அதிமுக தலைவர்கள் அதனை மறுத்து, முதல்வர் வேட்பாளர் என்றுமே எடப்பாடி…

மேலும்...

அதிமுகவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் பாஜக!

சென்னை (30 டிச 2020): தேர்தலுக்கு பிறகே முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பதாக பாஜக தெரிவித்துள்ளது அதிமுக கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய…

மேலும்...

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை (07 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சமி ஒருமனதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்ற குழப்பம் ஏறக்குறைய இரண்டு மாத காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக தெரிவித்தார். கடந்த சில…

மேலும்...

அம்மாவின் அரசியல் வாரிசு -அனல் பறக்கும் தேனி!

தேனி (05 அக் 2020): நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேனியில் நாளைய முதல்வர் ஓபிஎஸ் என 100 அடி நீளத்திற்கு பிளக்ஸ் அமைத்து அம்மாவின் வாரிசு என கோஷமிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்ட சபை தேர்தலையொட்டி அரசியல் வியூகங்கள் நகர தொடக்கி விட்டன. களத்தில் அதிமுகவா? திமுகவா? என்ற போட்டியை விட, அதிமுகவில் ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? என்ற குழப்பங்கள் தொண்டர்களுக்கிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி…

மேலும்...

ஓபிஎஸ் தனது இல்லத்தில் தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

சென்னை (02 அக் 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர…

மேலும்...