டாஸ்மாக் – செம்மையாக ஏமாந்த குடிகாரர்கள்!

சென்னை (15 மே 2020): டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று குடிகாரர்களின் அனைத்து தகவல்களையும் பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மோடியின் மனைவியா? -உண்மை என்ன?

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. நாடெங்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில் சில பரபரப்பான செய்திகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் பெண்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற…

மேலும்...