இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – டெல்லியில் பரபரப்பு -VIDEO

புதுடெல்லி (29 அக் 2022): டெல்லியில் இருந்து பெங்களூரு பறக்கவிருந்த இன்டிகோ விமானத்தில் தீப்பொறி பறந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E-2131 இன்டிகோ விமானம் நேற்று இரவு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பறக்க தயாராக இருந்த விமானம் ஓடுபாதைக்கு 9.40 மணி அளவிற்கு வந்துள்ளது. 9.45 மணி அளவில் டேக் ஆப் ஆவதற்கு முழுவேகத்தில் சென்றபோது வலப்பக்க இருக்கைக்கு அருகே எஞ்சினில் திடீரென தீப்பற்றியது. டேக்…

மேலும்...

மதம் மாற்றிய குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுருக்கள் கைது!

புதுடெல்லி (22 ஜூன் 2021): இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக முஸ்லிம் மதகுரு இருவரை டெல்லியில் உ.பி. போலீசார் சர்ச்சைக்குரிய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது கைது செய்துள்ளனர் கைதான முப்தி காசி ஜஹாங்கிர் ஆலம் காசிமி, 52, மற்றும் உமர், 57, ஆகியோரால் நடத்தப்படும் இஸ்லாமிய தாவா மையத்தின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் நடந்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களில் உமர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிற்கு மாறியவர். பணம்,…

மேலும்...

சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

புதுடெல்லி (01 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் புதுடெல்லி வந்ததடைந்தனர். கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். இது சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

டெல்லியில் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டசபை தேர்தல்!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “டெல்லி சட்ட்சபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 2020, ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி டெல்லியில் ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் உள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமை செயலாளர்,…

மேலும்...