நெல்லை கண்ணன் மரணம்!

திருநெல்வேலி (18 ஆக 2022): பிரபல இலக்கிய பேச்சாளர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் (77) உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஆக.,18) காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

நெஞ்சு வலி காரணமாக நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி (30 ஜன 2020): நெல்லை கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடநத பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்...

இரண்டே வார்த்தையில் பதிலடி – எச்.ராஜாவை சீண்டிய சீமான்!

சென்னை (11 ஜன 2020): எச்.ராஜாவுக்கு சீமான் இரண்டே வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்படார். மேலும் சென்னை மெரினாவில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி எச்.ராஜா தலைமயில் போராட்டம் நடைபெற்றது. அவர் மீது பல மாவட்டங்களில் பாஜகவினர் அளித்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது…

மேலும்...

நெல்லை கண்ணன் கைது குறித்து முதல்வர் விளக்கம்!

சென்னை (07 ஜன 2020): நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ….

மேலும்...