டெல்லி கலவரம் – தலைவர்களின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: சோனியா காந்தி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை எதுவும் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்…

மேலும்...

டெல்லி கலவரம் – சோனியா காந்தி, ராகுல் காந்தி கவலை!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லி கலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கவலை தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. ஞாயிறன்று…

மேலும்...

குடியுரிமை சட்ட விவகாரம் – உத்தவ் தாக்கரே- மோடி, சோனியா காந்தி திடீர் சந்திப்பு!

புதுடெல்லி (21 பிப் 2020): மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளார். குடியுரிமை சட்டம் காரணமாக நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையிலும், பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கடசிகள் மகாராஷ்டிராவிலும் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே சிஏஏ குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என உத்தவ் தாக்கரே சமீபத்தில்…

மேலும்...

சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (02 பிப் 2020): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சோனியா காந்தி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சோனியா காந்தி, பிரதமர்,ஜனாதிபதி மரியாதை!

புதுடெல்லி (30 ஜன 2020): மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதையொட்டி, புது தில்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்…

மேலும்...

சோனியா காந்தி வீட்டு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

புதுடெல்லி (18 ஜன 2020): டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர், இன்று சோனியா காந்தியின் வீட்டு வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெறாவுள்ள டெல்லி சட்டப்பேரவஇ தேர்தலில் கராவல் நகர் மற்றும் படேல் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங், ஹர்மன் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படாததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

தமிழக காங்கிரஸுக்கு சோனியா காந்தி எச்சரிக்கை – பல்டி அடித்த கே.எஸ்.அழகிரி!

சென்னை (14 ஜன 2020): தமிழக காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் சோனியா காந்தி எரிச்சல் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் திமுகவை கடுமையாக சாடியிருந்தனர். இவ்விவகாரம் டெல்லியில் பெருமளவில் பிரதிபலித்தது. இதனாலேயே குடியுரிமை சட்டம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று டெல்லியில் இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்…

மேலும்...

மாணவர்களை நேரடியாக சந்திக்க தைரியம் உண்டா? – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (13 ஜன 2020): மாணவர்களை சந்திக்க மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த…

மேலும்...