தமிழக சுகாதாரத்துறை செயலர் மனைவி, மகன் உட்பட நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 ஜுலை2020): தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மனைவி, மகன் உட்பட குடும்பத்தினர் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் மாமியார் உட்பட நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள், கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...